நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார்.
இளைஞர் காங்கிரசார் நூதன போராட்டம்
புதுச்சேரி:
பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் கடைபிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திராகாந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசு கூறியது போல கோடி பேருக்கு வேலை தரவில்லை. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள்கூட ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், பொதுச் செயலாளர்கள் திருமுருகன், வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜா குமார், அமைப்புசாரா பிரிவு தலைவர் செல்வநாதன்,வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.