கோப்பு படம்.
பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது
- இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் கீதா, சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
வேலூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார்.
பெற்றோரை இழந்த அந்த இளம்பெண் புதுவைக்கு வேலை தேடி கடந்த 5 மாதத்திற்கு முன்பு இங்கு வந்தார். புதுவையில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அந்தப் பெண்ணுக்கும் அதே துணிக்கடையில் வேலை பார்த்து வந்த மரக்காணம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் (24 )என்பவ ருக்கும் காதல் ஏற்பட்டது.
சதீஷ்குமார் அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த சதீஷ்குமார் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் கீதா, சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வேலூரைச் சேர்ந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தைக் கூறி அவரிடம் உல்லாசம் அனுப வித்து விட்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.