திருபுவனை பிரைனி ப்ளூம்ஸ் லெக்கோல் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா தியான பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
மாணவர்களுக்கு யோகா தியான பயிற்சி
- திருபுவனை பிரைனி ப்ளூம்ஸ் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- பயிற்சியாளர் டாக்டர்.பாஸ்கரன் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரி:
திருபுவனை பிரைனி ப்ளூம்ஸ் லெக்கோல் இன்டர்நேஷனல் சி. பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா தியான பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கல்வி குழுமத்தின் தலைவரும் வக்கீலுமான அருண்குமார் கலந்து கொண்டு யோகா பயிற்சியினை தொடங்கி வைத்தார் . அரவிந்த் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் திவ்யா அருண்குமார் யோகா பயிற்சிகள் குறித்து பேசினார்.
சகஜ யோகா பயிற்சியாளர் டாக்டர்.பாஸ்கரன் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மாணவர்க ளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.