புதுச்சேரி

பேரணியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்து நடந்து வந்த காட்சி.

உலக தாய்மொழி நாள் பேரணி

Published On 2023-02-22 10:59 IST   |   Update On 2023-02-22 10:59:00 IST
  • உலகத் தாய்மொழி யொட்டி ராதே அறக்க ட்டளை, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் மொழியுணர்வுப் பேரணி நடந்தது.
  • கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி வந்தனர்.

புதுச்சேரி:

உலகத் தாய்மொழி யொட்டி ராதே அறக்க ட்டளை, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் மொழியுணர்வுப் பேரணி நடந்தது.

காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணிக்கு ராதே அறக்கட்டளை நிறுவனர் என்ஜினீயர் தேவதாஸ் தலைமை வகித்தார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் தமிழ்நெஞ்சன், புதுவை வலைப்பதிவர் சிறகத் தலைவர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சந்திர பிரியங்கா பேரணியை தொடங்கி வைத்தார். தாகூர் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் இளங்கோ, கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் வேங்கடேசன், கண்ணதாசன் கழக நிறுவுநர் வக்கீல் கோவிந்தராசு, இலக்கியன், துறை.மாலிறையன், வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தினர்.

பேரணியில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன், தமிழர் களம் அழகர், திராவிடர் கழகத் தலைவர், வீரமணி, மண்டலத் தலைவர் அன்பரசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள், கலைஞர்கள் சங்கப் பொறுப்பாளர் ராமச்சந்திரன்,மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் ராஜா, தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தமிழ்மணி, தன்னுரிமை கழகத் தலைவர் சடகோபன், அண்ணா பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்.சண்முகம் தலைமையில் 20 தவில், 20 நாதசுர கலைஞர்கள் மேளதாள இசை முழங்கினர்.

தமிழ்த்தாய், ஓளவையார், திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் வேடமணிந்து அணிவகுத்து நாடகக் கலைஞர்கள் வந்தனர். கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழிப்பு ணர்வு பதாகைகள் ஏந்தி வந்தனர். தமிழ் முழக்கங்கள் கொண்ட துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்க ப்பட்டன. பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணி கடற்கரை சாலை காந்தி சிலையில் நிறைவடைந்தது.

Tags:    

Similar News