பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பயிலரங்கம் நடந்த போது எடுத்த படம்.
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பயிலரங்கம்
- பிற மொழிகளை கற்று கொள்வதால் வெளி நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் போது பெரிய உதவியாக இருக்கும்.
- “மனோபாவம் “ “முறையான தகவல்” தொடர்புடன் எப்படி நடந்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த துணை படிப்பு கல்லூரியான அலைய்டு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மாணவ ர்களுக்கு நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் நெறிமுறை, மனோபாவம், மற்றும் தகவல் தொடர்பு குறித்த பயிலரங்கு தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி டீன் ஆலிஸ் கிஸ்கு வரவேற்றார். பிம்ஸ் மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் பிரதீப் திலகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் உதய குமார் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது மாணவ பருவம் அற்புதமான பருவ மாகும். மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ படிப்பு படிக்கும் நீங்கள் நோயாளியுடன் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதுபோல பிற மொழிகளை கற்று கொள்வதால் வெளி நாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் போது பெரிய உதவியாக இருக்கும். தகவல் தொடர்பில் மொழி மிகவும் அவசியம். என்றார்.
பின்னர் மாணவ- மாணவிகள் நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்போது" நெறிமுறையுடன் நல்ல "மனோபாவம் " "முறையான தகவல்" தொடர்புடன் எப்படி நடந்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
கல்லூரியின் "கீதம்" பாடலை ஸ்வேதா ஓமன் அறிமுகம் செய்தார். அதனை சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி பேராசிரியர் கார்த்திக் வெளியிட்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரி யர்கள் இக்பால், ரமாதேவி அனிதா ராமதாஸ் மஞ்சரி ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
முடிவில் இயன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஶ்ரீ காந்த் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஹரிதாஸ் செய்திருந்தார்.