புதுச்சேரி

உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை தொடங்கி வைத்த காட்சி. அருகில் கென்னடி எம்.எல்.ஏ. உள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.12 ¾ கோடியில் பணிகள்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

Published On 2023-03-02 14:51 IST   |   Update On 2023-03-02 14:51:00 IST
  • சுடுகாட்டில்தகனமேடை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில் இளநிலைப்பொறியாளர் ரமேஷ், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5.67 கோடியில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை விழா நடந்தது.

வாய்க்கால்களை புனரமைத்தல், நேரு நகரில் உள்ள குறுக்கு வீதிகளில் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி செய்தல், சுடுகாட்டில்தகனமேடை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இது போல் உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியில் ரூ.7 கோடியே 24 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., கென்னடி, முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத், உள்ளாட்சித் துறை செயலர் ஜவகர், கலெக்டர் மணிகண்டன், உள்ளாட்சி துறை இயக்குனர் ரவிதீப் சிங் சாகர், புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலைப்பொறியாளர் ரமேஷ், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News