வில்லியனூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் பணி ஆணையை வழங்கிய காட்சி.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 600 பேருக்கு பணி ஆணை
- ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன் குமார் ஆகியோர் பணி ஆணை கடிதத்தினை வழங்கினர்.
- எஸ்பிஐ. ஸ்டார் ஹெல்த், எல்ஐசி, எச்டிஎஃப்சி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாவட்ட அளவில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் துவக்கி வைத்தார். நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் இணைந்து தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா (டிடியு-ஜிகேஒய்) திட்டத்தின் கீழ் நடந்த வேலை வாய்ப்பு முகாமில்
சுமார் 1800-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த நேர்காணல் மூலம் முதல் சுட்டமாக 600-க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன் குமார் ஆகியோர் பணி ஆணை கடிதத்தினை வழங்கினர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த வேல்பூல், ராணி மெட்ராஸ், தி சுப்ரீம் இண்டஸ்ரீஸ், போசிக்கோ இந்தியா, சதர்லேண்டு குளோபல், பிஎஸ்ஏ கார்ப்பரேஷன், ஃபவுண்டேவர், இண்டகரா சாப்ஸ்ட்வேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்டிரைவ் குளோபல், எஸ்பிஐ. ஸ்டார் ஹெல்த், எல்ஐசி, எச்டிஎஃப்சி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.