புதுச்சேரி
தையல் மிஷின் போன்ற நலத்திட்ட உதவிகளை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
- கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.
- தையல் மிஷின் போன்ற நலத்திட்ட உதவிகளை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துக்கு கென்னடி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷின் போன்ற நலத்திட்ட உதவிகளை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில் உடன் அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொகுதி துணைத் செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, மாணவர் அணி நிசார், மீனவர் அணி விநாயகம், மற்றும் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.