புதுச்சேரி

  முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி பாஸ்கர் எம். எல். ஏ. நலதிட்ட உதவிகளை வழங்கிய காட்சி. அருகில் எம்.எல்.ஏ. எ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், முன்னாள் துணை சபாநாயகர் பக்தவத்சலம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

அரியாங்குப்பம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-08-05 14:58 IST   |   Update On 2023-08-05 14:58:00 IST
  • பாஸ்கர் எம்.எல்.ஏ. வழங்கினார்
  • ஏழை எளியவர்களுக்கு இலவச தள்ளுவண்டி வழங்கப்ப ட்டது. ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்தி ரங்கள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் ரங்க சாமியின் பிறந்த நாள் விழா அரியாங்குப்பம் தொகுதி யில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டா டப்பட்டது.

அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்ட பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் துணை சபாநாயகர் பக்த வச்சலம் தலைமை தாங்கினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.ேஜ. ஜெயபால், காங்கிரஸ் பொருளாளர் வேல்முருகன், முன்னாள் சேர்மன் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பொதுப்ப ணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அரசு கொறடா ஏ. கே .டிஆறுமுகம் கே.எஸ்.பி. ரமேஷ்

எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். முன்னதாக தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் நேற்று காலை 8 மணி அளவில் வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து காலை 9 மணியளவில் காமராஜர் நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி, இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.

மேலும் கலைமாமணி விருது பெற்ற 28 பேருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. காந்திராம் நற்பணி மன்றம் மூலமாக நடைபெற்ற இலவச அரசு வேலைக்கான பயிற்சி வகுப்பு எடுத்த 20 ஆசிரியர்க ளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

மேலும் மாடு வளர்ப்ப வர்களுக்கும் மீனவர்களு க்கும் வங்கியின் மூலமாக கடன் உதவி பெறுவதற்கான

ஆணை 50 பேருக்கு வழங்கப்பட்டது. சிறு தொழில் செய்யும் ஏழை எளியவர்களுக்கு இலவச தள்ளுவண்டி வழங்கப்ப ட்டது. ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்தி ரங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

முடிவில் என். ஆர்.காங்கிரஸ் பிரமுகர் காமராஜ் நன்றி கூறினார்.  

Tags:    

Similar News