புதுச்சேரி

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தி.மு.க.அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்.  

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா-தி.மு.க. அமைப்பாளர் சிவா வழங்கினார்

Published On 2023-01-09 15:02 IST   |   Update On 2023-01-09 15:02:00 IST
  • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் 82-வது பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார் முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, தி.மு.க. மாநில, தொகுதி அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமனின் 82-வது பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஜானகிராமன் மகன் சரவணன் என்ற ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் நடராஜன் உட்பட நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். விழா முடிந்ததும் வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவு விருந்தளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார் முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு, தி.மு.க. மாநில, தொகுதி அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆம்பூர் சாலையில் உள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரின் படத்திற்கு மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.ஜா. சரவணன் என்கின்ற ஆறுமுகம், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கைலாஷ் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார், நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ரிச்சசர்ட், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மறைந்த ஜானகிராமன் குடும்பத்தார் விஜயலட்சுமி, சாந்தாபாய், சரவணன், சந்திரேஷ் குமார், அசோக்குமார், மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் கைலாஷ்,என்ஜினீயர் மனோஜ் குமார் மற்றும் என்ஜினீயர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News