புதுச்சேரி
புதுவையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்
விநாயகர் சதுர்த்தி விடுமுறை புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
- பாரதிபூங்கா, தாயவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியுடன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையை புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் புதுவையில்
குவிந்தனர். நேருவீதி, காமராஜர் சாலை, அண்ணாசாலை, காந்தி வீதி, புஸ்சி வீதி உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாரதிபூங்கா, தாயவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.