புதுச்சேரி

புதுவையில் உருவான சிலைகளை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்டார்.

சிமெண்டு, இரும்பு பயன்டுத்தாமல் புதுவையில் உருவான கிராம தெய்வ சிலைகள்

Published On 2023-03-27 04:49 GMT   |   Update On 2023-03-27 04:49 GMT
  • பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது.
  • இந்த கோவிலுக்கு பெரிய அளவிலான கிராம தெய்வ சிலைகள் உருவாக்கப்படுகிறது.

புதுச்சேரி:

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பெரியசாமி கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு தனி கட்டிடமோ கல் சிற்பங்கள் எதுவும் கிடையாது. மணல் சிற்பங்கள் மட்டுமே சிறிய அளவில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்த கோவிலுக்கு பெரிய அளவிலான கிராம தெய்வ சிலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த சிலைகளை புதுவை வில்லியனூர் டெரகோட்டா கலைஞர் முனுசாமி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர்

ஓராண்டாக எந்திரங்கள் உதவி இல்லாமல் கைளை பயன்படுத்தி மட்டுமே உருவிக்கியுள்ளனர். 25 அடி உயரத்தில் 100 டன் மண் கொண்டு வைக்கோல், இரும்பு, அலுமினியம், தாமிரம் போன்றவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 800 டிகிரியில் சிற்பங்கள் சுடு வைக்கப்படும். ஆனால் இந்த சிற்பங்கள் அனைத்தும் 1200 டிகிரி வேக வைத்துள்ளனர்.

இதனால் கோவில் இருக்கும் பகுதியில் இடி விழுந்தாலும் இந்த சிலைகள் தாங்கி பூமிக்குள் செலுத்தும். பெரியசாமி, செல்லியம்மாள், விநாயகர், ஆற்றடியார், கிணத்தடியார், சிங்கமலையான், பொன்னுசாமி, நாடசன்னியாசி என கிராம தெய்வங்களின் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News