புதுச்சேரி

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்ற காட்சி.

காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்

Update: 2023-02-05 03:59 GMT
  • புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் கரிக்கலாம்பக்கம் உழவர் உதவியகத்தை சேர்ந்த காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
  • முகாமில் கரிக்க லாம்பாக்கம் மற்றும் ஏம்பலம், கோர்க்காடு ஆகிய பகுதிகள் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் கரிக்கலாம்பக்கம் உழவர் உதவியகத்தை சேர்ந்த காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் அலுவலர் தினகரன் காய்கறி சாகுபடி செய்யும் முறை, லாபம் அடைவது குறித்து விளக்கிப் பேசினார்.டாக்டர் செல்வமுத்து ஆத்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகள் எவ்வாறு பயன்பெறுகின்றனர் என்றும் இனி செயல்படு த்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

முகாமில் கரிக்க லாம்பாக்கம் மற்றும் ஏம்பலம், கோர்க்காடு ஆகிய பகுதிகள் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

காய்கறி விதை மினி கிட் மற்றும் காய்கறி ஸ்பிரேயர் மற்றும் நுண்ணுட்டி சத்து ஆகியவை இலவசமாக விவசாயி களுக்கு வழங்க ப்பட்டது இறுதியில் கிராம விரிவாக்க பணியாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழாவின் ஏற்பாடுகளை தப்புசாமி செய்திருந்தார்.

Tags:    

Similar News