புதுச்சேரி

வைத்தியலிங்கம் எம்.பி. பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளரும் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளருமான வினோத் ரெயின்போ நகரில் ஏழைகளுக்கு இலவச அரிசியை வழங்கிய காட்சி. 

வைத்திலிங்கம் எம்.பி.பிறந்தநாள்

Update: 2022-10-05 09:57 GMT
  • வைத்திலிங்கம் எம்.பி.பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து காங்கிரசார் வழிபட்டனர்.
  • வைத்திலிங்கம் எம்.பி. யின் தீவிர ஆதரவாளரும் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளருமான வினோத் ஏற்பாட்டின் பேரில் ரெயின்போ நகரில் 500 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

வைத்திலிங்கம் எம்.பி.பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து காங்கிரசார் வழிபட்டனர்.

பிறந்தநாள் வைத்திலிங்கம் எம்.பி.க்கு பிறந்த நாளாகும். இதையடுத்து வைத்திலிங்கம் எம்.பி. பிறந்த நாளையொட்டி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரசார் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. யின் தீவிர ஆதரவாளரும் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளருமான வினோத் ஏற்பாட்டின் பேரில் ரெயின்போ நகரில் 500 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணா நகரிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News