புதுச்சேரி

கோப்பு படம்.

பதவி உயர்வு பெற்ற என்ஜினியர்களுக்கு பணியிடம்

Published On 2023-04-21 14:12 IST   |   Update On 2023-04-21 14:12:00 IST
  • அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
  • பணியிடங்களுக்கான ஆணை வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

புதுச்சேரி:

அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

காலியாக உள்ள என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப நடந்த போராட்ட ங்களை தொடர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் செயலருடனான பேச்சு வார்த்தையில் ஒரூ கண்காணிப்பு பொறியாளர் பதவியையும், 13 செயற்பொறியாளர் பதவி களையும் பதவி உயர்வு மூலமாக நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஆணை, கடந்த மாதம் 23-ந் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்த பதவி உயர்வு அளிக்கும்போதே, பணி யிடங்களையும் குறிப் பிட்டு ஆணையை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த வுடன் பணியிடங்களுக்கான ஆணை வெளியிடப்படும் என உறுதிய ளிக்கப்பட்டது.

பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைய உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தும் 20 நாட்கள் கடந்து விட்டது. ஆனால், பதவி உயர்வு வழங்கப்பட்டவர் களுக்கான பணியிடங்கள் இதுவரை ஒதுக்கப்பட வில்லை. இந்த பிரச்னையில் முதல் அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் தலையிட்டு, ஒரு கண்காணி ப்பு பொறியாளர் மற்றும் 13 செயற்பொறியாளர் பதவி களுக்கான பணியிடங்களை அறிவித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News