புதுச்சேரி

கோப்பு படம்.

நகராட்சி வசூலிக்கும் நிதியை வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்-எதிர்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-03-30 08:26 GMT   |   Update On 2023-03-30 08:26 GMT
  • எனது வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் பகுதியில் வளர்ச்சி கட்டணமாக ரூ.2.50 கோடி வரை வசூல் செய்துள்ளனர்.
  • புதுவை நகராட்சி மிக மோசமான நிலையில் உள்ளது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சி த்தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

எனது வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் பகுதியில் வளர்ச்சி கட்டணமாக ரூ.2.50 கோடி வரை வசூல் செய்துள்ளனர். இவ்வளவு நிதி பெற்றாலும், ஒரு சாலை கூட அமைக்கவில்லை. புதுவை நகராட்சி மிக மோசமான நிலையில் உள்ளது.

குப்பைவரி, வீட்டு வரி என பல வரிகள் வசூலிக்கின்றனர். அது மட்டுமில்லாமல் சாலை, வாய்க்கால் கட்டுவது தொடர்பாக மேம்பாட்டுக்கட்டணம் வாங்கி விட்டு அதை சம்பளமாக போடுகிறார்கள். வளர்ச்சி நிதியை அப்பகுதியின் வளர்ச்சிக்கு செலவு செய்ய சொல்லுங்கள்.

புதுவை நகராட்சி எந்த வேலையும் செய்வதில்லை. எம்.எல்.ஏ. நிதி ரூ.2 கோடி எப்போது தருவீர்கள்?

இவ்வாறு சிவா பேசினார்.

Tags:    

Similar News