புதுச்சேரி

மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் 

புதுச்சேரியில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது- மத்திய மந்திரி பாராட்டு

Published On 2022-12-25 20:27 GMT   |   Update On 2022-12-25 20:27 GMT
  • ஜிப்மருக்கு இந்த ஆண்டு ரூ.1340 கோடி நிதி ஒதுக்கீடு.
  • இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடி ஒதுக்கீடு.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் புதுச்சேரியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 


புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையை சிறப்பாகச் செயல்படுகின்றது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைத்துள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29,000 நோயாளிகள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் புதுச்சேரிக்கு ஆரம்ப நிலை மற்றும் இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதேபோல் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.1340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


முன்னதாக புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தல், மருந்தியல் பூங்கா உருவாக்குதல், புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மையம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ரங்கசாமி மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவாரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், புதுச்சேரி அரசின் நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News