புதுச்சேரி

முகாமை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

காசநோய் கண்டுபிடிப்பு விழிப்புணர்வு முகாம்-சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-04-06 05:38 GMT   |   Update On 2023-04-06 05:38 GMT
  • புதுவை அருகே வில்லியனூர் ஒதியம்பட்டு வண்ணார ப்பரதேசி சித்தர் சுவாமிகள் கோவில் வளாகத்தில் சுகாதாரதுறையின் மூலமாக காச நோய் கண்டுபிடிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
  • மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் விவேகா முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

புதுவை அருகே வில்லியனூர் ஒதியம்பட்டு வண்ணாரப்பரதேசி சித்தர் சுவாமிகள் கோவில் வளாகத்தில் சுகாதாரதுறையின் மூலமாக காச நோய் கண்டுபிடிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் . சிவா முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் விவேகா முன்னிலை வகித்தார். வில்லியனூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திலகம் காச நோய் அறிகுறிகள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில் சமூக நலத்துறை தலைமை அதிகாரி டாக்டர் வேத பிரியா, வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி செவிலியர்கள் ரத்னா, எட்வீனா, சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவ துறையைச் சார்ந்த மருத்துவ அதிகாரி மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று காச நோய் விவரங்களை சேகரித்தனர்.

Tags:    

Similar News