புதுச்சேரி

இறந்த போலீசாரின் நினைவு தூணுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மலர் அஞ்சலி செலுத்திய காட்சி.

காவல்துறையில் பணியின் போது இறந்த போலீசாருக்கு மரியாதை

Published On 2023-10-21 08:28 GMT   |   Update On 2023-10-21 08:28 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
  • ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக் கப்படுகிறது.

புதுச்சேரி:

காவல் துறையில் பணியில் இருந்தபோது இறந்த காவலர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தும் தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படு கிறது.

சீன படையினரால் எல்லையில் 1959-ம் ஆண்டு நடந்த சண்டையின் போது எல்லை பாதுகாப்பு வீரர்கள் வீரமரண மடைந்தனர். பலர் காணாமல் போனார்கள்.

இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

புதுவை கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் -அமைச்சர் ரங்கசாமி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.டி.ஜி.பி. பிரிஜேந்திரகுமார் யாதவ் ஆகியோரும் மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. 

Tags:    

Similar News