புதுச்சேரி

குடிமகன்கள் அனைவரும் அதிகாரம் படைத்தவர்கள் மற்றும் ஆர்.டி.ஐ. சட்டம் குறித்தான சிறப்பு வகுப்பு அளிக்கப்பட்ட காட்சி.

தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்து பயிற்சி

Published On 2023-07-16 10:23 IST   |   Update On 2023-07-16 10:23:00 IST
  • தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 குறித்தான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மனித உரிமைகள் படிப்பகத்தில் நடைபெற்றது.
  • பங்கேற்பாளர்களாக பல்வேறு இயக்கங்கள், கட்சிகளின் சார்பில் பலர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சோசியல் விஷன் இணைந்து தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 குறித்தான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மனித உரிமைகள் படிப்பகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து பயிற்சிகளும், குடிமகன்கள் அனைவரும் அதிகாரம் படைத்தவர்கள் மற்றும் ஆர்.டி.ஐ. சட்டம் குறித்தான சிறப்பு வகுப்பு அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்புக்கு பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சோசியல் விஷன் தலைவர் ஆசீர் ஆர்.டி.ஐ. சட்டம் குறித்தான பயிற்சிகளை அளித்தார். பங்கேற்பாளர்களாக பல்வேறு இயக்கங்கள், கட்சிகளின் சார்பில் பலர் பங்கேற்றனர்.

மேலும் மனித உரிமைகள் மற்றும் நுகர்வேர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கோபிநாதன், கண்ணன், ராஜா, சிவா, செல்வம் மோரிஸ், கந்தசாமி, சிவபாலன், சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News