புதுச்சேரி

விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்ற காட்சி.

பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி

Published On 2023-08-25 13:06 IST   |   Update On 2023-08-25 13:06:00 IST
  • விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் சார்பில் நடைபெற்றது.
  • செவித்திறன் இயல் நிபுணர் ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்து விளக்கம் அளித்தனர்.

புதுச்சேரி:

விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டேஷன், காரைக்கால் ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஒலியியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் துறை சார்பில் பெற்றோர்களுக்கு பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக துணைத்தலைவர் சந்திரசேகர் ஆலோசனைப்படி நடந்த இந்த முகாமில் இயக்குனர் அருணா தேவி, இணை பேராசிரியர் ரம்யா, உதவி பேராசிரியர் அருண்குமார், செவித்திறன் இயல் நிபுணர் ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்த முகாமில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News