புதுச்சேரி

பயிற்சி பெற்ற டிபன் டோ விளையாட்டு தேசிய நடுவர்களுக்கு கராத்தே சுந்தர்ராஜன் சான்றிதழ் வழங்கிய காட்சி.

டிபன் டோ விளையாட்டு தேசிய நடுவர்களுக்கான பயிற்சி முகாம்

Published On 2023-06-06 06:46 GMT   |   Update On 2023-06-06 06:46 GMT
  • தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சுமார் 50 டிபென்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.
  • நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை அமைச்சுர் டிபன் டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் 3 நாட்கள் கவுண்டன் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, புதுவை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சுமார் 50 டிபென்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியினை புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும் டிபன் டோ சங்கத்தின் தலைவருமான கராத்தே சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மேலும் நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கினார். இதில் டெல்லியில் உள்ள பாரத்யா டிபென்டோ அலையன்ஸ் அசோசியேஷன் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மிதுன் யாதவ் மற்றும் புதுவை மாநிலத்தின் பொதுச் செயலாளர் ரகுமான் சேட்டு மற்றும் பயிற்சியாளர்கள் அசாருதீன், ரியாஸ்தீன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News