புதுச்சேரி

கோப்பு படம்.

சுற்றுலா பயணிகளை குறிவைத்து போக்குவரத்து போலீசார் அபராதம்-நேரு எம்.எல்.ஏ. புகார்

Published On 2023-03-29 05:08 GMT   |   Update On 2023-03-29 05:08 GMT
  • உப்பனாறு வாய்க்காலில் சிதைந்த தரையை மீண்டும் அமைக்க வேண்டும்.
  • நகர பகுதியில் குடிநீர் குடிக்க உகந்தாக இல்லாததால் கிட்னி பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, சரும நோய் பாதிப்பு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

உப்பனாறு வாய்க்காலில் சிதைந்த தரையை மீண்டும் அமைக்க வேண்டும். தரை அமைக்கும் போது கழிவுநீர் ஒட தனியாக வாய்க்கால் அமைக்க வேண்டும். இப்படி செய்தால் உப்பனாறில் வாய்க்காலின் மற்ற பகுதிகள் சுத்தமாக இருக்கும். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகர பகுதியில் குடிநீர் குடிக்க உகந்தாக இல்லாததால் கிட்னி பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, சரும நோய் பாதிப்பு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து போலீசார் சுற்றுலா பயணிகள் வாகனங்களை குறி வைத்து அபராதம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். ஆர்வ மிகுதியால் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழக்கும் சுற்றுலா பயணிகளின் உயிரை காக்க அரசு முன் வர வேண்டும்.

விமானம் பயணிகளுக்கும் விமான நிலையத்திலிருந்து தங்கும் இடங்களுக்கு செல்ல போதிய வாகன வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். விமான நிலையத்தில் இருந்து நகர பகுதிகளுக்கு பஸ் இயக்க வேண்டும்.

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கோவிந்தசாலை சின்னப்பொய்கை அந்தோணியார் கோவில் பகுதி குடிசை மாற்று வாரியத்தால் கட்டி கொடுக்கப்பட்ட ராஜீவ்காந்தி அரசு குடியிருப்புகளை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News