புதுச்சேரி

கோப்பு படம்.

ஏரிகளை மேம்படுத்தி சுற்றுலா திட்டங்கள்-அங்காளன் எம்.எல்.ஏ யோசனை

Published On 2023-03-28 13:46 IST   |   Update On 2023-03-28 13:46:00 IST
  • அமைச்சர்கள் துறை மூலம் அறிவிக்கும் திட்டங்களை செய்ய வேண்டும். அதேபோல், செய்ய முடியும் என்ற விஷயங்களை மட்டுமே அறிவிக்க வேண்டும்.
  • உள்ளூர் மீனவர்களுக்கு இந்த உரிமத்தை வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பேசியதாவது:-

அமைச்சர்கள் துறை மூலம் அறிவிக்கும் திட்டங்களை செய்ய வேண்டும். அதேபோல், செய்ய முடியும் என்ற விஷயங்களை மட்டுமே அறிவிக்க வேண்டும். ஏரி, குளம், குட்டை, வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியத்தை ரூ.15 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

படகு சவாரிக்கான உரிமம் வெளியூர் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்களுக்கு இந்த உரிமத்தை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 வழங்குவது போதாது. எனவே, மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ வீதம் அரிசி வழங்க வேண்டும். மீனவ சொசைட்டிகளுக்கு தலைவர்களை நியமிக்க வேண்டும்.

புதுவையில் மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமத்தை தவிர்த்து சுற்றுலா என்று எதுவும் இல்லை. நிறைய ரெஸ்டோ பார்களை தான் திற ந்துள்ளீர்கள்.

ஒரு நாளைக்கு மேல் சுற்றுலா பயணிகள் பொழுது போக்குவதற்கு சுற்றுலா தலங்கள் இல்லை. எனவே, கனகன் ஏரி, வேல்ராம்பட்டு உள்ளிட்ட ஏரிகளை மேம்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றி படகு சவாரியை ஆரம்பிக்க வேண்டும்.

வேளாண்துறையில் காலியாக உள்ள கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News