விநாயகா மிஷன் அலைடு சயின்ஸ் கல்லூரிக்கு சிறந்த உயர்கல்விக்கான விருதை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கிய காட்சி.
விநாயகா மிஷன் அலைடு சயின்ஸ் கல்லூரிக்கு சிறந்த உயர்கல்விக்கான விருது
- சிகரம் 2023 விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
- இவ்வாண்டிலும் இவ்விருதினை தொடர்ந்து பெறுவது என்பது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது.
புதுச்சேரி:
தமிழ்நாட்டின் செய்தி தொலைக்காட்சி நிறுவனமானது சிகரம் விருது என்ற விருதுகள் வழங்கும் விழாவினை ஆண்டுதோறும் கல்வி சேவையில் சிறந்து விளங்குவோரை அங்கிகரிக்கும் நோக்கத்தோடு நடத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் இவ்வாண்டிற்கான சிகரம் 2023 விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடத்தியது.இதில் பல்வேறு கல்வியாளர்கள், வல்லுநர்கள் ,கல்வி நிறுவனத்தினர் பலர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிகரம்-2023 சிறந்த உயர்கல்விக்கான விருது சிறப்பு விருந்தினர்கள் மூலம் வழங்கப்பட்டது.
இதனை துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து துறைக்கு இவ்விருதானது 2-வது முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-
கடந்தாண்டு மற்றும் இவ்வாண்டிலும் இவ்விருதினை தொடர்ந்து பெறுவது என்பது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது.
இவ்விருதானது எங்கள் கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி மாணவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவதற்காக மேற் கொள்ளும் நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடு களை அடிப்படையாகவும் , ஆராய்ந்து இவ்விருது வழங்கப் பட்டுள்ளது.
இது எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. என்றார்.
இவ்விருதினை பெறுவதற்கு தனது சிறந்த பங்களிப்பினை அளித்த துறையின் டீனுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள் வாழ்த்தினையும் பாராட்டையும் தெரி வித்தனர்.