தேரை பெண்கள் மற்றும் மாணவிகள் வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி.
திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்
- பெண்கள்- மாணவிகள் வடம் பிடித்து இழுத்தனர்
- விழாவில் 22-ந் தேதி தெப்பல் உற்சவமும், 23-ந் தேதி விடையாற்றி உற்சவ மும் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவு அம்மன் வீதிவுலா நடைபெற்று வந்தது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெண்கள், மாணவிகள் மட்டும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் 22-ந் தேதி தெப்பல் உற்சவமும், 23-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற் பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.