புதுச்சேரி

கோப்பு படம்.

மாடியில் இருந்து தவறி விழந்த தொழிலாளி பலி

Published On 2022-08-23 14:57 IST   |   Update On 2022-08-23 14:57:00 IST
  • கருவடிக்குப்பத்தில் மொட்டைமாடியில் இருந்து தவறி விழந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
  • தங்கராசு இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம்.

புதுச்சேரி:

கருவடிக்குப்பத்தில் மொட்டைமாடியில் இருந்து தவறி விழந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

புதுவை கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 67). கட்டிட தொழிலாளி இவருக்கு கமலா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணமாகி விட்டது.

தங்கராசு இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம். அதுபோல் இரவு தங்கராசு சாப்பிட்டு விட்டு வீட்டின் மொட்டை மாடியில் தூங்க சென்றார்.

நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழுந்து நடந்து வந்த போது தூக்க கலக்கத்தில் தங்கராசு எதிர்பாரதவிதமாக தவறி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமயடைந்த தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

அரியாங்குப்பம் அருகே ேநாணாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி வயது 53 மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு பொற்கிளை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவதன்று கோவிந்தசாமி லாஸ்பேட்டை நாவற்குளம் ரோட்டில் ஒரு வீட்டில் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென தடுமாறி மரத்தில் இருந்து கீேழ விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி கோவிந்தசாமி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News