புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

Published On 2022-11-14 10:45 IST   |   Update On 2022-11-14 10:45:00 IST
  • வில்லியனூரில் மதுக்கடையில் உறவினருடன் மது குடித்த கட்டிட தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார். வில்லியனூர் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது39). கட்டிட தொழிலாளி.
  • பின்னர் பரமசிவமும், சத்திய மூர்த்தியும் வில்லிய னூர்- கூடப்பாக்கம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூரில் மதுக்கடையில் உறவினருடன் மது குடித்த கட்டிட தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார்.

வில்லியனூர் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது39). கட்டிட தொழிலாளி. இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

வேலை இல்லாத நாட்களில் பரமசிவம் மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் பரமசிவம் உறவினர் சத்திய மூர்த்தி என்பவருடன் மது குடிக்க செல்வதாக தனது மனைவி அருள்மொழியிடம் கூறி சென்றார்.

பின்னர் பரமசிவமும், சத்திய மூர்த்தியும் வில்லிய னூர்- கூடப்பாக்கம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுக்கடையில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பரமசிவம் மயங்கி சாய்ந்தார். உடனே அவரை உறவினர் சத்தியமூர்த்தி மற்றும் அங்கு மது குடித்து கொண்டிருந்த கலிவரதன், ராமச்சந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் மீட்டு அகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரமசிவம் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மனைவி அருள்மொழி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி அஞ்சுகம், இவர்களது மகன் ராஜி(36). கடந்த சில ஆண்டுகளாக ராஜி மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அஞ்சுகம் தனது மகனை ராஜியுடன் வில்லியனூர் ஆச்சாரியாபுரத்தில் தனது தங்கை வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

இந்தநிலையில் ராஜி தனது தாயிடம் தண்ணீர் கேட்டார். இதையடுத்து அஞ்சுகம் தனது மகனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். தண்ணீர் கொடுத்து விட்டு ராஜி தூங்க செல்வதாக கூறினார். பின்னர் சிறிது நேரம் கழித்து டிபன் காப்பிட ராஜியை எழுப்பிய போது அவர் அசைவற்று கிடப்பதை கண்டு அஞ்சுகம் அதிர்ச்சியடைந்தார். ராஜி தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அஞ்சுகம் தனது மகன் சாவு குறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News