புதுச்சேரி

கோப்பு படம்.

காவலாளி மயங்கி விழுந்து சாவு

Published On 2022-11-03 10:45 IST   |   Update On 2022-11-03 10:45:00 IST
  • முத்திரையர்பாளை யத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
  • உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சை வரவழைத்து பாகுபலியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

புதுச்சேரி:

முத்திரையர்பாளையத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் பாகுபலி (வயது60). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர் புதுவை முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் கணபதி நகரில் தங்கி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பணிமுடிந்து பாகுபலி தான் தங்கியிருந்த அறையில் தூங்கினார். பாகுபலியுடன் தங்கியிருந்த கலியபெருமாள் என்பவர் பார்த்த போது பாகுபலி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சை வரவழைத்து பாகுபலியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாகுபலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News