புதுச்சேரி

கோப்பு படம்.

வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து

Published On 2023-03-03 10:57 IST   |   Update On 2023-03-03 10:57:00 IST
  • புதுவை கோரிமேடு சஞ்சீவிநகர் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார்.
  • கத்தி குத்தில் தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த மகேசை அவரது தந்தை மாணிக்கம் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

புதுச்சேரி:

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுவை கோரிமேடு சஞ்சீவிநகர் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்(வயது37). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று  இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான அய்யனார், முருகன், வீரப்பன் ஆகியோருடன் அங்குள்ள குளக்கரை அருகில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது திடீரென மகேசுக்கும் அய்யனாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மற்ற நண்பர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் மகேஷ் வீட்டுக்கு வந்து விட்டார்.

ஆனால் ஆத்திரம் தீராத அய்யனார் நள்ளிரவு 12 மணியளவில் மகேஷ் வீட்டுக்கு வந்தார். பின்னர் மகேசிடம் சமாதானம் பேசலாம் என கூறி வெளியே அழைத்து சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் சென்ற போது திடீரென அய்யனார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேசை சரமாரியாக குத்தினார்.

மேலும் இனிமேல் என்னிடம் வைத்துக்கொண்டால் கொலை செய்து விடுவேன் என்று அய்யனார் அங்கிருந்து சென்று விட்டார். கத்தி குத்தில் தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த மகேசை அவரது தந்தை மாணிக்கம் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு மகேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News