புதுச்சேரி
கடும் வெயிலால் புதுவை கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
புதுவையில் சுட்டெரிக்கும் வெயில்
- புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் கொளுத்தியது.
- வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் இறுதியில் மழை பெய்தது.
புதுச்சேரி:
புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் கொளுத்தியது. அதன்பின் வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் இறுதியில் மழை பெய்தது.
இதனால் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. பின்னர் தினமும் மாலையில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் மேலும் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்து கிறது. இன்றும் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி னர்.
இரவிலும் வெப்பச் சலனம் நிலவுகிறது. இதனால் மக்கள் புழுக் கத்தால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.