புதுச்சேரி

கொம்பாக்கம் பாலமுருகன் நகரில் சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

Published On 2023-03-22 05:49 GMT   |   Update On 2023-03-22 05:49 GMT
  • ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 858 மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
  • கிருஷ்ணமூர்த்தி, செந்தில், அமலா ஜெயசீலன், முருகவேல், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை நகராட்சி மூலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாலமுருகன் நகருக்கு ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 858 மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில், புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ஞானசேகரன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், ஜலால் பாய், ஜெகன்மோகன், கந்தசாமி, ரமணன், அக்பர் பாய், சுப்பிரமணியன், வரதன், அருண், பரமசிவம், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், அமலா ஜெயசீலன், முருகவேல், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News