புதுச்சேரி

திருக்கனூரில் கலை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

கலை விழாவை ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்

Published On 2022-08-16 08:50 GMT   |   Update On 2022-08-16 08:50 GMT
  • புதுச்சேரி கலை விழா திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.
  • மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எம்.ஏ.வுமான நமச்சிவாயம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி:

புதுவை அரசு கலை பண்பாட்டு துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் புதுச்சேரி கலை விழா திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.

விழாவை உள்துறை அமைச்சரும், மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எம்.ஏ.வுமான நமச்சிவாயம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

முதல் நாள் மங்கல இசையும் அதனை தொடர்ந்து லயம் நாட்டியாலயாவின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் மேற்கு வங்காளம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன.

நேற்று 2-ம் நாள் தெலுங்கானா மாநில நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், தமிழக கரகம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து ரசித்தனர்.

அரியானா மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத்துறை ஊழியர்கள் மாறன், முருகையன், முருகானந்தம், சுப்ரமணியன் மற்றும் அவுட் சோர்சிங் ஊழியர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News