கிருமாம்பாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த வாலிபர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் விசாரணை நடத்திய காட்சி.
ரவுடிகள் வீடுகளில் விடிய விடிய போலீசார் சோதனை
- புதுவை மாநிலத்தின் எல்லை பகுதியான கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களில் சுமார் 47 ரவுடி மற்றும் கொலை கொள்ளை என பல்வேறு குற்றவாளிகள் இருந்து வருகின்றனர்.
- குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்ற போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் எல்லை பகுதியான கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களில் சுமார் 47 ரவுடி மற்றும் கொலை கொள்ளை என பல்வேறு குற்றவாளிகள் இருந்து வருகின்றனர். இதில் 7 பேர் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வில்லியனூர் பகுதியில் நடந்த பா.ஜனதா பிரமுகர் படுகொலை சம்பவத்தால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காதவாறு தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின் பேரில் பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் (பொறுப்பு), உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் நேற்று இரவு கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை விடிய விடிய நீடித்தது. அப்போது குற்றவாளிகளின் வீடுகளுக்கு சென்ற போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சுற்றித்திரியும் இளைஞர்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.