கோப்பு படம்.
மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை உடனடியாக அரசு அறிவிக்கவேண்டும்
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- அனைத்து படிப்புக்குமான கல்வி கட்டண விவரங்களை சென்டாக் இணையதளத்தில் வெளியிட ஆவண செய்திட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய அளவிலான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கான தேதிகளை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்க லைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கு புதுவை மாநில மாணவர்கள் தாங்கள் பெற்ற நீட் மதிப்பெ ண் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தற்போது சென்டாக் நிர்வாகம் மாணவர் சேர்க்கை க்கான விண்ணப்பங்களை பெற்று வரும் நிலையில் விண்ணப்பித்த அனை த்து மாணவர்களின் இருப்பிட, சாதி மற்றும் அனைத்து சான்றுகளையும் சரிபார்த்து மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இணையதள கலந்தாய்வினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நடத்த வேண்டும்.
மேலும் புதுவை சுகாதாரத்துறை சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான இட விவரங்கள், அனைத்து படிப்புக்குமான கல்வி கட்டண விவரங்களை சென்டாக் இணையதளத்தில் வெளியிட ஆவண செய்திட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.