புதுச்சேரி

விளையாட்டு மைதானத்தை தனியாரிடம் இருந்து மீட்டு தரக்கோரி அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்த காட்சி.

கல்வித்துறை விளையாட்டு மைதானத்தை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும்

Published On 2023-10-06 05:50 GMT   |   Update On 2023-10-06 05:50 GMT
  • அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு
  • இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து திசைதிருப்பி விளை யாட்டின் மீது ஆர்வத்தை கொண்டுவர வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை பாகூர் தொகுதியில் பள்ளி கல்வித்துறைக்கு சொந்த மான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானம் தனியார் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மைதானத்தை மீட்க பாகூர் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் சார்பில் சுமார் 300 பேர் அடங்கிய மீட்பு போராட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமையில், விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடலை மீட்டு விளையாட்டு வீரர்கள், பொதுமக்களுக்கு அர்ப் பணிக்க வேண்டும். இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து திசைதிருப்பி விளை யாட்டின் மீது ஆர்வத்தை கொண்டுவர வேண்டும்.

மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க வழி செய்ய வேண்டும். விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு த்துறை மூலம் பயிற்சியா ளர்களிடம் சிறப்பு பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கிராமப்புற விளையாட்டு திடலில் சிறந்த போட்டிகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Tags:    

Similar News