புதுச்சேரி

கோப்பு படம்.

வெளிப்படையான சீனியாரிட்டி முறையில் கல்வித்துறை கலந்தாய்வு நடத்த வேண்டும்

Published On 2023-07-06 13:54 IST   |   Update On 2023-07-06 13:54:00 IST
  • ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை
  • அதிகாரிகள் ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் புதிய சிக்கல்களை மீண்டும் உருவாக்கித் தருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாரி, கவுரவ தலைவர் சேஷாசலம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் ஆசிரியர்க ளுக்கான சரியான மாற்றல் உத்தரவு கொள்கை இதுவரை எதுவும் இல்லை. காலியாக உள்ள பணியி டங்களை ஆண்டுதோறும் நிரப்பாததால் 900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்துறையின் அலட்சியப்போக்கும் ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கும்தான் ஆசிரியர்களுக்கு இக்கட்டான சூழ் நிலையை உருவாக்கியுள்ளது.

எந்த ஆசிரியரும் காரைக் கால் மற்றும் கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றா மல் நகர்புறங்களில் பணியாற்றுவதில்லை. புதிய நியமனங்கள், பதவி உயர்வுகள் மூலம் கிராமப் புறங்களிலும், காரைக்கால் மாவட்டத்திலும் பணி அமர்த்தப்படுகின்றனர். இவ்விடங்களில் பணி செய்த பின்னர்தான் சீனியர் ஆசிரியர்கள் என்ற முறையில் நகர்புறங்களில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

ஆசிரியர்கள் கிராமப் புறங்களில் பணி செய்யாதது போலும், காரைக்கால் மாவட்டத்தில் பணி செய்யாதது போலும் சில சமூக அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஆசிரியர்கள் மீதான தவறான கருத்துக்களைத் திணித்து சித்தரிக்கின்றனர். அதிகாரிகள் ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் புதிய சிக்கல்களை மீண்டும் உருவாக்கித் தருகின்றனர்.

ஏற்கனவே வெளிவந்த 2 அரசாங்க ஆணையை தவிர்த்து புதிதாக வழிகாட்டு நெறிமுறை என்ற பெயரில் சுற்றறிக்கை தயார் செய்து ஆசிரியர்களுக்கு எதிர்ப்பான செயலை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதை எதிர்த்துத்தான் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் தற்போது போராடி வருகின்றனர் என்பது உண்மை.

அவசர கால வழிகாட்டு நெறிமுறை சுற்றிக்கையை விட்டுவிட்டு சரியான வெளிப்படையான சீனியாரிட்டி அடிப்படையில் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை முன் வர வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் அவசரகால முறையில் பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்பி ஆசிரியர்கள் இடமாறுதல் கொள்கைக்கு அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News