கோப்பு படம்.
அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்
- நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- புதுவையில் ஆண்டுக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி கடனுக்கு வட்டி, அபராத வட்டி செலுத்துகிறோம்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ. நிருபர்க ளிடம் கூறியதாவது:-
புதுவைக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலாசீத்தா ராமன் நாளை வருகிறார். முதல்- அமைச்சர், அமைச்சர்க ளோடு கலந்து பேசி கோரிக்கைகளை வலியுறுத்துவது தொடர்பாக பேசியுள்ளார்.
அதோடு, புதுவையை நிதிக்குழுவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தொகையாக ஆண்டுக்கு ரூ.ஆயிரத்து 450 கோடி வழங்குகிறோம்.
இதை டெல்லி அரசு வழங்குவது போல கூட்டணி யில் உள்ள மத்திய அரசே நேரடியாக வழங்க வேண்டும். இதனால் மிச்ச மாக கிடைக்கும் நிதியின் மூலம் புதுவையில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். பொது கணக்கு தொடங்கும்போது இருந்த கடனை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு செய்யாததால் கடன் தொகை அதிகரித்துள்ளது. இந்த கடன்தொகையை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். புதுவையில் ஆண்டுக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி கடனுக்கு வட்டி, அபராத வட்டி செலுத்துகி றோம். இந்த வட்டி, அபராத வட்டிக்கு 5 ஆண்டு சலுகை பெற வேண்டும். இதை மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி பெற வேண்டும்.
புதுவை மாநிலத்துக்கு வழங்கப் படும் நிதி குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். ஏன் திட்டங்க ளுக்கு நிதியை செலவிட வில்லை? இதற்கு காரணம் யார்? திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரி கள் யார்? என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் நிதியை முழுமையாக செலவிட மத்திய மந்திரி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.