புதுச்சேரி

 சிமெண்டு சாலை பணியை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்ட காட்சி.

சிமெண்டு சாலை பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-11-30 08:51 GMT   |   Update On 2023-11-30 08:51 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
  • ஜெயராமன், பியர், அரிகிருஷ்ணன், செல்வம், ராஜி, ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுக்குட் பட்ட எல்லையம்மன் கோவில் வீதியில் தாழ்வாக சாலை இருந்ததால் தற்போது பெய்த மழையால் சாலை உள்வாங்கி மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடியிடம் முறையிட்டனர்.

இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இப்பணியை கென்னடி

எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியின் போது நகராட்சி உதவி பொறி யாளர் யுவராஜ், ஒப்பந்ததாரர் பிராங்க்ளின், ஜெயராமன், பியர், அரிகிருஷ்ணன், செல்வம், ராஜி, ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News