புதுச்சேரி

கோப்பு படம்.

எலக்ட்ரிஷியனை கத்தியால் வெட்டிய வியாபாரி

Published On 2023-04-19 15:11 IST   |   Update On 2023-04-19 15:11:00 IST
  • பாலத்தின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
  • அவரது நண்பர்கள் மீட்டு அரியூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

புதுச்சேரி:

புதுவை அரியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 29)எலக்ட்ரிஷியன்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.சில நாட்களுக்கு முன்னர் விநாயகமூர்த்தி, தினேஷை தாக்கியுள்ளார். இதுகுறித்து தினேஷ் தனது கடை உரிமையாளர் ஆனந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு விநாயமூர்த்தி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தினேசுடன் வந்த ஆனந்தகுமார், என் கடையில் வேலை பார்க்கும் தினேசை ஏன் அடித்தாய் என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

ஆனந்தகுமார் வைத்திருந்த கத்தியை எடுத்து விநாயகமூர்த்தியை வெட்டியுள்ளார். அவர் தடுத்தபோது அவரது கையில் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த விநாயகமூர்த்தியை அவரது நண்பர்கள் மீட்டு அரியூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News