புதுச்சேரி

கீழூர் நினைவிடத்தில் அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் பா.ஜனதவினர் சுத்தம் செய்த காட்சி.

கீழூர் நினைவு சின்னத்தை சுத்தம் செய்த பா.ஜ.க.வினர்

Update: 2022-08-14 08:15 GMT
  • 75-வது சுதந்திர தினம் அமுத பெருவிழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இதையொட்டி பள்ளிகளில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தி பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

புதுச்சேரி:

75-வது சுதந்திர தினம் அமுத பெருவிழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தி பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

புதுவையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் இல்லத்திற்கு சென்று கவுரவித்தல், நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட பாரதமாதா சிலையினை மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் செல்லக்கூடிய ரத யாத்திரை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிலையில் கீழூர் நினைவு சின்னத்தை பாரதீய ஜனதா கட்சியினர் சுத்தம் செய்தனர். மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் ஜெயக்குமார், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட 20- ற்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பாரதப் பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தினை அனைவரும் செயல்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் கீழூர் கிராமத்தில் அமைந்துள்ள நினைவு சின்னத்தை சுத்தம் செய்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

Similar News