புதுச்சேரி

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள்.

தற்காலிக ஊழியர்கள் தர்ணா

Published On 2022-12-07 14:20 IST   |   Update On 2022-12-07 14:20:00 IST
  • புதுவை குருமாம்பேட்டில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியராக 79 பேர் பணியாற்றி வருகின்றனர்.
  • ஏற்கனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் பல துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புதுவை குருமாம்பேட்டில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியராக 79 பேர் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் பல துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கால்நடை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் பெண்கள் உள்ளிட்ட 79 பேருக்கு முதல்-அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10 ஆயிரத்தை வழங்காமல் இழுத்தடிக்க செய்யும் கல்லூரி முதல்வர் செழியனை கண்டித்து தற்காலிக ஊழியர்கள் அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் முதல்-அமைச்சர் அறிவித்ததை நிறைவேற்றாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தொடர் முற்றுகை போராட்டம் அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News