கோப்பு படம்.
தொழில்நுட்ப பல்கலைக்கழக ஊழியர் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
- தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார்.
- குடித்துக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி எனக்கும் தங்கைக்கும் திருமண நடக்கும் என்று ஆதங்கமாக பேசி இருந்தார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு பிள்ளைசாவடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 48).
பல்கலைகழக ஊழியர் இவர் காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்க ழகத்தில் பணியாற்றி வரும் அய்யனார் அங்குள்ள அரசு குடியிருப்பு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தார். பல்கலைக்கழகத்திற்கு வேலைக்கு செல்லாமல் காலை முதலே மது அருந்தி வந்துள்ளார்.
இதனால் அய்யனாருக்கும் அவரது மனைவி அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. காலையில் வேலைக்குச் சென்று இரவு வீட்டுக்கு திரும்பிய ஐயனாரின் மகன் அருண் தந்தையிடம் ஏன் இப்படி குடித்துக் கொண்டி ருக்கிறாய்? திருமண வயதில் நானும் தங்கையும் உள்ளோம். இப்படி குடித்துக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி எனக்கும் தங்கைக்கும் திருமண நடக்கும் என்று ஆதங்கமாக பேசி இருந்தார். இன்றுடன் மது குடிப்பதை நிறுத்தி விடுகிறேன் என அய்யனார் கூறிவிட்டு இரவு முழுவதும் மொட்டை மாடியில் மது குடித்துள்ளார்.
இரவு சாப்பாட்டுக்கு கூட வீட்டிற்கு வரவில்லை. திடீரென நேற்று அதிகாலை சத்தம் கேட்டு அங்கு அருணும் அமுதாவும் சென்று பார்த்த போது அய்யனார் வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் காலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு கதிர்காம மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்திவருகிறார்.