புதுச்சேரி

புதுவை தமிழ்ச் சங்க தலைவர் முத்துவுக்கு உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி. சந்தோசம், டெல்லி தமிழ் சங்க தலைவர் முகுந்தன் ஆகியோர் விருது வழங்கிய காட்சி.

தமிழ்ச் சங்க தலைவருக்கு விருது

Published On 2022-09-07 15:18 IST   |   Update On 2022-09-07 15:18:00 IST
  • சென்னை பாரதிய வித்யா பவனில் புதுவைத் தமிழ்ச் சங்க தலைவர் முத்து பவள விழா நிகழ்ச்சியில் 75 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
  • புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வின் தமிழ் பணியை பாராட்டி இந்த ஆண்டிற்கான கலைத்தமிழ் விருதினை உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி. சந்தோசம், டெல்லி தமிழ் சங்க தலைவர் முகுந்தன், ஆகியோர் வழங்கினர்.

புதுச்சேரி:

சென்னை பாரதிய வித்யா பவனில் புதுவைத் தமிழ்ச் சங்க தலைவர் முத்து பவள விழா நிகழ்ச்சியில் 75 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வின் தமிழ் பணியை பாராட்டி இந்த ஆண்டிற்கான கலைத்தமிழ் விருதினை உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி. சந்தோசம், டெல்லி தமிழ் சங்க தலைவர் முகுந்தன், ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பக்ரைன் நாட்டின் தமிழ்ச்சங்க தலைவர் ஹரிஹரன், புதுவை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் சீனு மோகன் தாஸ், அறிவியல் அறிஞர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News