புதுச்சேரி

நரிக்குறவர்களுடன் மத்திய மந்திரி முருகன் கலந்துரையாடல்

Published On 2022-07-10 09:28 IST   |   Update On 2022-07-10 09:28:00 IST
  • வில்லியனூரில் நரிக்குறவர்களுடன் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.
  • வில்லியனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனையை பார்வையிட்டு பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார்.

புதுச்சேரி:

புதுவையில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய மந்திரி முருகன், வில்லியனூர் கூடப்பாக்கம் சாலையில் வசிக்கும் நரிக்குறவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது, நரிக்குறவர்கள் மனைப்பட்டா வழங்கி, அடிப்படை வசதி செய்து தரக்கோரினர். அவர்களிடம், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி கூறினார்.

அதனை தொடர்ந்து வில்லியனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனையை பார்வையிட்டு பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆயுர்வேத மருத்துவத்துறை இயக்குனர் ஜெயந்தி, மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் திறப்பு விழா நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் மோகன்குமார், மாவட்டத் தலைவர் ஆனந்தன், தொகுதி பொறுப்பாளர்கள் கண்ணபிரான், செந்தில்குமரன், மாவட்ட துணைத் தலைவர் விஜயலட்சுமி கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News