புதுச்சேரி
null

கவரிங் நகை மோசடி வழக்கில் காரைக்கால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்

Published On 2023-04-03 07:43 GMT   |   Update On 2023-04-03 08:30 GMT
  • அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
  • மோசடி வழக்கில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லால் உத்தரவிட்டார்.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு நகைக் கடையில் கவரிங் நகையை விற்க முயன்ற காரைக்காலை சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்பவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில் (35), ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி உள்பட 7 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இவர்கள் கூட்டாக சேர்ந்து காரைக்கால், தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள், அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதற்கிடையே மோசடி வழக்கில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லால் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News