புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம்- தம்பதி உள்பட 5 பேர் கைது

Published On 2023-08-17 09:16 IST   |   Update On 2023-08-17 09:16:00 IST
  • வீட்டில், விபசாரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
  • கைதானவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பம் புறவழி சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஒரு வீட்டை வாடகை எடுத்து விபசாரம் நடப்பதாக அதிரடி குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், அதிரடி குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிசாமி மற்றும் பெண் போலீசார் விரைந்தனர்.

அப்போது, அந்த வீட்டில், விபசாரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரியாசுதீன் (வயது 39), அவரது மனைவி தாட்சாயிணி (35) மற்றும் முதலியார்பேட்டையைசேர்ந்த பிரமிளா (48), கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஜெயா என்ற தனம் (50), அரும்பார்த்தபுரம் சச்சிதானந்தம் என தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 அழகிகள் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News