புதுச்சேரி

கோப்பு படம்.

தி.மு.க.வின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்-சிவா வேண்டுகோள்

Published On 2022-10-31 14:28 IST   |   Update On 2022-10-31 14:28:00 IST
  • நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
  • எனவே இளைஞர்களான நீங்கள் தி.மு.க.வின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

புதுச்சேரி:

நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது மாநில அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

மதம், ஜாதியை வைத்து அரசியல் செய்யாத இயக்கமும், அனைவரும் சமம் என்ற அடிப்படையான திராவிட கொள்கையை கொண்டதும் திமு.க.தான், தற்போது நாட்டிற்கு அத்தியாவசியமான கொள்கையும் இதுதான்.

எனவே இளைஞர்களான நீங்கள் தி.மு.க.வின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு சிவா பேசினார்.

நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வேலவன், நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, தொகுதி துணை ஒருங்கிணைப்பாளர் அருண், வில்லியனூர் தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News