கோப்பு படம்.
இரிடியம் வாங்கித்தருவதாக புதுவை சப்-இன்ஸ்பெக்டர் மோசடி- டி.ஜி.பி.யிடம் புகார்
- ஒருவரிடம் ஏமாந்து, புகார் கொடுக்க சென்ற என்னிடம் சப்-இன்ஸ்பெக்டரே ஏமாற்றியதை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.
- சென்னையில் உள்ளவருக்கு கொடுத்து ஏமாந்தது போல இல்லாமல், தன் மூலம் கொடுத்தால் பணம் உறுதியாக திரும்ப கிடைக்கும் என்றார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித் தோப்பை சேர்ந்தவர் பாலாஜி( 54). இவர் போலீஸ்டி.ஜி.பி.யிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பொதுப்பணி த்து றையில் வேலை செய்து வருகிறேன். என்னிடம் ரூ.5 லட்சம் பெற்று திருப்பித்தராமல் சென்னையை சேர்ந்தவர் ஏமாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் உருளை யன்பேட்டை போலீஸ் நிலையம் சென்று சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசே கரிடம் புகார் கூறினேன். அவர் இந்த புகார் குறித்து விசாரித்த போது எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசேகர், தனக்கு இரிடியம் வியாபாரம் செய்யும் கும்ப லோடு பழக்கம் உள்ளது. அவர்கள் வியாபாரம் முடிந்து பெரும் தொகைக்கு காத்திரு க்கின்றனர். சென்னையில் உள்ளவருக்கு கொடுத்து ஏமாந்தது போல இல்லாமல், தன் மூலம் கொடுத்தால் பணம் உறுதியாக திரும்ப கிடைக்கும் என்றார்.
மேலும் ரூ.30 ஆயிரம் மட்டும் கொடுத்தால்போதும் என்றார். இதை நம்பி ரூ.30 ஆயிரம் கொடுத்தேன். சட்டசபை கூட்டத்தொடர் பணி இருப்பதால் அதன்பின் சென்னை சென்று பணத்தை பெற்று வரலாம் என தெரிவித்தார். ஆனால் சட்டசபை கூட்ட த்தொடருக்கு பின் என் அழைப்பை ஏற்கவில்லை.
சென்னை பண விவகாரத்தை நானே பார்த்துக்கொள்கிறேன். நான் அளித்த ரூ.30 ஆயிரத்தை திருப்பித்தரும்படி கேட்டேன். ஆனால் இன்றுவரை திருப்பித்தரவில்லை. ஒருவரிடம் ஏமாந்து, புகார் கொடுக்க சென்ற என்னிடம் சப்-இன்ஸ்பெக்டரே ஏமாற்றியதை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.
இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இதன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.