கோப்பு படம்.
மாணவர்களுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்க வேண்டும்-சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- பருவநிலை மாற்றத்தால் இயற்கையாகவே அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
- பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக பரவுகின்றது.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் புதுவை கல்வி துறை அமைச்சர் நமச்சிவாத்துக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் தற்போது பருவநிலை மாறி வருகின்றது. பருவநிலை மாற்றத்தால் இயற்கையாகவே அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். அதிலும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
தற்சமயம் பருவநிலை காய்ச்சல் அதிக அளவில் குழந்தைகளை தாக்கி வருகின்றது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக பரவுகின்றது.
குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதைவிட உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். மருத்துவர்களின் கருத்துப்படி இன்னும் 2-3 வாரங்களில் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்கின்றனர்.
எனவே 1-ம் வகுப்பு முதல் 5-ந் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையிருப்பின் ஆன்லைன் வகுப்பு நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.